கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் சத்யா வித்யாலயா மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.

News image
Updated On :28 மே 2016, 11:15 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில், ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா மாணவர்கள் நால்வர் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.

இப் பள்ளியில் தேர்வு எழுதிய 29 பேரும் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் ஆர்.காயத்திரி, எஸ்.கௌசிகா, மாணவர்கள் டி.கோகுல் பாரதி, டி.சசி பாலன் ஆகிய நால்வரும் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று தேசிய சாதனை படைத்துள்ளனர்.15 மாணவர்கள் ஏ1 கிரேடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆங்கிலத்தில் 16 பேரும், தமிழில் 15 பேரும், ஹிந்தியில் ஒருவரும், கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 7 பேரும், சமூக அறிவியலில் 11 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தாளாளர் சி.குமரேசன், நிர்வாக அறங்காவலர்கள் டாக்டர் சித்ரா, கே.அரவிந்தன், ஒருங்கிணைப்பாளர் அமுதா, முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.