கனரா வங்கியில் 3500 தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி!
பொதுத்துறை வங்களில் ஒன்றான கனாரா வங்கியில் அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி குறித்து...

கனரா வங்கியில் 3500 தொழில்பழகுநர் பயிற்சி
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, உலகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் முன்னணி பொதுத்துறை வங்கி கனரா வங்கி. இந்த வங்கியில் அளிக்கப்பட உள்ள ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து நாளைக்குள்(அக்.17) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பார்ப்போம்...
பணி: தொழில்பழகுநர் பயிற்சி(GRADUATE APPRENTICES)
மொத்த காலியிடங்கள்: 3500 (தமிழ்நாட்டுக்கு 391)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் உள்ளூர் வட்டார மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். 1.12023 முதல் 1.9.2026 காலக்கட்டத்திற்குள் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.9.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்பிடிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்
உதவித் தொகை: பயிற்சியின்போது மாகம் 16,650 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினர் ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: வங்கி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு https://nats.education.gov.in என்ற தொழிற்பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, உருவாக்கப்படும் சேர்க்கை எண்ணை எதிர்காலப் பயன்பாட்டிற்காக விண்ணப்பதாரர்கள் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Canara Bank Recruitment 2026 for 3500 Apprentice Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


