கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உங்கள் உடலின் கண்ணாடி: இது நக ஜோதிடம்!

விரல் நகங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த பல விஷயங்களைக் கூறுகிறது. பண்டையக் காலங்களிலிருந்தே உடலில் ஏற்படும் நூற்றுக்கணக்கான நோய்களைக் கண்டறிவதற்கான கருவியாக நகங்கள் பயன்பட்டு வருகிறது.

News image
Updated On :12 ஜூலை 2017, 10:04 am

தினமணி

விரல் நகங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த பல விஷயங்களைக் கூறுகிறது. பண்டையக் காலங்களிலிருந்தே உடலில் ஏற்படும் நூற்றுக்கணக்கான நோய்களைக் கண்டறிவதற்கான கருவியாக நகங்கள் பயன்பட்டு வருகிறது. சமீபத்திய உடல்நலம் மட்டுமின்றி, உடலில் உள்ள பிரச்னைகளின் கண்ணாடியாகவும் நகம் அமைந்திருக்கிறது. 


பிறைநிலா போன்ற குறி:

Story image

நகத்தின் சதை பகுதிக்கு அருகே இருக்கும் பிறை நிலவு போன்ற அமைப்பு ஆரோக்கியமான தைராய்டு மற்றும் செரிமானத்தைக் குறிக்கும். அப்படி உங்கள் நகத்தில் இந்த அறை நிலவு போன்ற குறி இல்லையென்றால் அது தைராய்ட் பிரச்னைகள் வருவதற்கான அறிகுறியாகும், பலவீனமான தைராய்டு மன அழுத்தம், பதற்றம், எண்ண ஓட்டங்களில் அடிக்கடியான மாற்றங்கள் போன்ற விலைவுகளை ஏற்படுத்தும்.


வெள்ளை நிறம்:

Story image

வெள்ளைவெளிர் என்று வெளுத்தால் போல் இருக்கும் நகம் ரத்த சோகை, இதய பிரச்னை,  கல்லீரல் கோளாறு, ஊட்டச்சத்துக்குறைபாடு போன்றவற்றை குறிக்கிறது.


மஞ்சள் நிறம்: 

Story image

பொதுவாக மஞ்சள் நிறத்திலான நகம் புஞ்சை தொற்றால் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டால், மோசமடைந்து நகத்தில் ஆணி பொன்றவற்றை ஏற்படுத்தி நகம் அடியோடு பேர்ந்து விழவும் நேரிடும். ஒரு சில சமயம் மஞ்சள் நகங்கள் நீரிழிவு அல்லது தடிப்புத் தோல் அழற்சி மற்றும் நுரையீரல் நோய் போன்றவற்றையும் குறிக்கும்.


நீல நிறம்:

Story image

நீல நிறத்திலான நகம் உடலுக்கு தேவையான பிராணவாயு (ஆக்சிஜன்) கிடைப்பதில்லை என்பதை கூறுகிறது. இது எம்பீமா எனப்படும் நுரையீரல் பிரச்னையையும் குறிக்கும். சில இதய நோய்கள் வருவதற்கான அறிகுறியாகவும் இந்த நில நிற நகம் கருதப்படுகிறது.


சிதைந்த நகம்:

Story image

சமமான மேற்பரப்பு இல்லாமல் சிதைந்த நிலையில் பாலம் பாலமாகவோ வெடிப்பு விட்டது போலவோ இருக்கும் நகம் தொல் சமந்தபட்ட நோய் வருவதற்கான அறிகுறியாகும். மேலும் வாதம் போன்ற நோய் வருவதற்கான அரம்பமாகவும் இருக்கலாம். 


நகத்தை சுற்றி வீக்கம்:

Story image

நகத்தை சுற்றியுள்ள சதை வீக்கமாகவோ, சிவப்பாகவோ இருப்பது லூபஸ் எனப்படும் இணைப்பு திசு கோளாறை விளைவிப்பதாக அமையும். சில சமயம் தொற்று காரணமாகவும் இந்த மடிப்புகளில் வீக்கம் ஏற்படும்.


நகத்தில் கருப்பு கோடு:

Story image

நகத்தில் கருப்பு கோடுகள் தென்பட்டால் அதை கவனத்தில்கொண்டு விரைவாக மருத்துவ அலோசனையை பெற வேண்டும். ஏனென்றால் இது மெலனோமா எனப்படும் மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோயிக்கான அறிகுறியாகும். 


ஆரோக்கியமானவரின் நகம்:

Story image

வெள்ளையாக இல்லாமல் இளஞ்சிவப்பு நிறத்தில், எந்த ஒரு கருப்பு கோடுகளோ, வெள்ளை புள்ளிகளோ இல்லாமல் பிறை நிலவு பொன்ற குறியுடன் சமமான மேற்பரப்பு கொண்டதாகவும் இருக்கும் நகம் உங்களுக்கு இருந்தால், உங்கள் உடல் நூறு சதவீதம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.