கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மும்பை உரண் நகரில் நடமாடிய மர்ம நபர்களின் கணினி வரைபடங்கள்: காவல் துறை வெளியிட்டது!

மும்பைக்கு அருகில் உள்ள உரண் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு நபர்களின் கணினி வரைபடங்களை காவல்துறை வெளிட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2016, 9:32 am

DIN

மும்பைக்கு அருகில் உள்ள உரண் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு நபர்களின் கணினி வரைபடங்களை காவல்துறை வெளிட்டுள்ளது.

மும்பைக்கு அருகில் கடற்படைத் தளம் அமைந்துள்ள உரண் நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 5-6 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்து மும்பை கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, மும்பையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து மும்பை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மும்பை கடற்கரையையொட்டி உள்ள கேட்வே ஆஃப் இந்தியா, ஆளுநர் மாளிகை, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கவனித்ததாகக் கூறிய 4 மர்ம நபர்களைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் கூறியதை வைத்துஉருவாக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய இரு நபர்களின்  கணினி வரைபடங்கள் வெளியிடப்பட்டன. மீதமுள்ள  நபர்களின் வரைபடங்களும் விரைவில் வெளியிடபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பையைச் சுற்றி பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.