கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மனநலம் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு மருத்துவ வசதி இல்லை: ராம்நாத்

மனநலம் பாதிக்கப்பட்ட 90 சதவீத நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எச்சரித்துள்ளார்.

News image
தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிய மனநலம் தொடர்பான உலக சுகாதார மாநாட்டில், சிறப்பாகச் சேவையாற்றி வரும் மனநல மருத்துவர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
Updated On :2 நவம்பர் 2017, 8:03 pm

DIN

மனநலம் பாதிக்கப்பட்ட 90 சதவீத நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எச்சரித்துள்ளார்.
மனநலம் தொடர்பான உலக சுகாதார மாநாட்டை தில்லியில் வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:
உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டு தேசிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 14 சதவீத நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதி தேவைப்படுவது தெரியவந்துள்ளது.
மன நல பாதிப்பு காரணமாக சுமார் 2 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெருநகரங்களில் வசிப்பவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என்று வயது வேறுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பினருக்கும் மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விவர அறிக்கை வேதனை அளிக்கிறது.
நமது தேசத்தில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குள் குறைவான இளைஞர்கள் என்பது மன நல பாதிப்பு பிரச்னையை நாம் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சரியான அணுகுமுறை மூலம் இப்பிரச்னையை நாம் சரிசெய்ய வேண்டும். 
நாட்டு மக்கள் தொகை 125 கோடியாக உள்ளது. ஆனால், 7 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மன நல மருத்துவர்களும் போதிய அளவில் இல்லை என்றார் ராம்நாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.