இனி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இல்லீங்க, 1.5 ஜிபி: ஏர்டெல்லின் அதிரடி சலுகைகள்!

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய ப்ரீ-பெய்ட் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 
இனி, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இல்லீங்க, 1.5 ஜிபி: ஏர்டெல்லின் அதிரடி சலுகைகள்!
Updated on
1 min read

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய ப்ரீ-பெய்ட் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 

குறிப்பாக ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக பல அதிரடி சலுகைகள் சமீப காலமாக அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஏர்டெல் ரூ.349, ரூ.799, ரூ.999, ரூ.1999 மற்றும் ரூ.3999 ஆகிய புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அச்சலுகைகளைப் பற்றி இங்குக் காண்போம்

ஏர்டெல் ரூ.349 பிளான் - இந்தத் திட்டம் தினசரி பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக 1.5ஜிபி டேட்டா (முன்பு 1ஜிபி) மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே.

ஏர்டெல் ரூ.799 பிளான் - இந்த திட்டம் 28 நாட்கள் கால அளவு கொண்டது. தினசரி பயன்பாட்டிற்கு அதிகபட்சமாக 3.5 ஜிபி டேட்டாவும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளுர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகின்றது.

ஏர்டெல் ரூ.999 பிளான் - இந்தத் திட்டம் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு நாளும் தேசிய ரோமிங் மற்றும் இலவச 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற உள்ளுர் 
மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது. மேலும் 90 நாட்களுக்கு 60ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.1999 பிளான் - இந்தத் திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அதிகபட்சமாக 125ஜிபி டேட்டாவை 180 நாட்களுக்கு வழங்குகிறது. வரம்பற்ற உள்ளுர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இலவசம். மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. 

ஏர்டெல் ரூ.3999 பிளான் - இந்தத் திட்டம் 360 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 360 நாட்களுக்கு 300ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற உள்ளுர் மற்றும் வெளியூர் அழைப்புகள் இலவசம். மேலும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. 

பொதுவாக மேலே வழங்கப்பட்டுள்ள டேட்டா பிளான்கள் பயனாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வட்டத்தைப் பொருத்து மாறுபடும். எனவே மை ஏர்டெல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com