கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆம் ஆத்மி குறித்த ஆவணத் திரைப்படம்: தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆம் ஆத்மி கட்சி குறித்த ஆவணத் திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:43 pm

DIN

ஆம் ஆத்மி கட்சி குறித்த ஆவணத் திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆம் ஆத்மி கட்சி உருவான விதம், அதன் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விதமாக உருவாகியுள்ள ஆவணத் திரைப்படம் 'அன் இன்ஸிக்னிஃபிகன்ட் மேன்'. திரைக்கதை ஆசிரியர்கள் குஷ்பு ரன்க்கா, வினய் சுக்லா ஆகியோரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (நவ.17) வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தில்லியைச் சேர்ந்த நச்சிகேதா வலேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவர், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் முகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மை வீசியவர் ஆவார். இவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது:
அரவிந்த் கேஜரிவால் முகத்தில் நான் மை வீசியது தொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், 'அன் இன்ஸிக்னிஃபிகன்ட் மேன்' திரைப்படத்தில் என்னைக் குற்றவாளியாக சித்திரித்துள்ளதாக அறிகிறேன். இதனால், சமூகத்தில் எனது நற்பயெருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
ஒரு படைப்பாளி தமது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். அது, திரைப்படம், புத்தகம் என எந்தத் தளமாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகியவை புனிதமானவை. அவற்றில் அவசரக் கோலத்தில் தலையிட்டுவிடக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.