கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்: அமைச்சரவைக் குழு முடிவெடுக்கும்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவெடுக்கும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:42 pm

DIN

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு முடிவெடுக்கும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், இப்போது குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்தினால், பெரும்பாலான தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத சூழல் ஏற்படும் கருதப்படுகிறது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அளித்த பதில்:
ஃபரூக் அப்துல்லா பேச்சு சர்ச்சை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும். இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் ஆலோசித்து வருகிறார். வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். இதனை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை ஆதரிப்பார்கள். மக்களவை உறுப்பினராக அவரும், இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டியது கட்டாயம் என்றார் அவர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் பெற்றதாக நடைபெற்று வரும் வழக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ரவி சங்கர் பிரசாத் மறுத்துவிட்டார்.
முன்னதாக, 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை இனி எப்போதும் மாற்ற முடியாது' என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.