கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: வாகனங்கள் சிக்கின; 5 பேர் பலி?

தெற்குக் கொல்கத்தாவின் மஜ்ஹேர்ஹட் பகுதியில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அதில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :4 செப்டம்பர் 2018, 12:06 pm

PTI


மேற்கு வங்க மாநிலம் தெற்குக் கொல்கத்தாவின் மஜ்ஹேர்ஹட் பகுதியில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், அதில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலிப்போரா என்ற பகுதியில் இருந்த இந்த மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை சிக்கிக் கொண்டன. தீயணைப்புப் படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.