கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2019, 7:21 am

DIN

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 

நாக்பூரில் இருந்து தில்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.

ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படும் முன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.உடனே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நிற்கும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் கட்கரி உள்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.