கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய கிஸான் சபை பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான ஹன்னான் முல்லா கூறுகையில், "புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். எனினும், அச்சட்டங்களில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களை புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எழுத்துமூலம் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுட்டுள்ள அனைத்து வேளாண் சங்கங்களுடன் இது தொடர்பாக ஆலோசித்துவிட்டு, மத்திய அரசுடன் புதன்கிழமை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வோம். புதிய வேளாண் சட்டங்களைத் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை' என்று கூறியிருந்த நிலையில், பேச்சுவார்த்தையை மத்திய அரசே ரத்து செய்துள்ளது.