பெங்களூரில் 15 காவலர்களுக்கு கரோனா: காவல்நிலையம் மூடல்
பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த 15 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரில் புதிதாக 15 காவலர்களுக்கு கரோனா

பெங்களூரில் புதிதாக 15 காவலர்களுக்கு கரோனா
பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த 15 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வைட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 27 காவலர்கள் இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காவலர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஜூன் 27-ம் தேதியன்று எச்ஏஎல் காவல் நிலையம் மூடப்பட்டது.
காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், மேலும் 12 காவலர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...