விமானச் சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் நிறைவு - கட்டணச் சலுகைகளை அறிவித்த இண்டிகோ
இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் நிறைவு


புதுதில்லி : இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவையை ஆரம்பித்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில் பயணிகளுக்கு சிறப்புக் கட்டணச் சலுகையை அறிவித்திருக்கிறது.
அதன் படி அடிப்படை விலை ரூ.915 லிருந்து ஆரம்பிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காண கட்டணம் கொண்ட பயணச் சீட்டை ஆகஸ்ட் 4-6 ஆம் தேதி வரை விற்க இருக்கிறார்கள்.
பயணச் சீட்டை செப்டம்பர் 1 - மார்ச் 26, 2022 க்குள்ளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா "விமானப் போக்குவரத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையை வழங்கி வந்ததற்காக பெருமை அடையும் இந்நேரத்தில் இண்டிகோவின் சிக்கலான காலகட்டத்தில் கூட உறுதுணையாக இருந்த பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இச்சலுகையை அறிவித்திருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
தினமும் மேற்கொள்ளும் 1000 பயணங்களில் 67 உள்நாட்டு பகுதிகளுக்கும் , 27 வெளிநாட்டு பகுதிகளும் செல்லும் இண்டிகோவிற்கு சொந்தமாக 270 விமானங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...