சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 4,529 பேர் பலி

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாக வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

News image
Updated On :19 மே 2021, 4:36 am

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாக வரும் நிலையில், கரோனாவின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவாக நேற்று செவ்வாய்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருவது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனாவால் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சில தினங்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில்  2,67,334-ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.54 கோடி (2,54,96,330) ஆகவும் அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,26,719 பேராகவும் குறைந்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4529 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,83,248-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,19,86,363-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,89,851 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 18 -ஆம் தேதி வரை 32,03,01,177 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. செவ்வாய்கிழமை ஒரேநாளில் 20,08,296 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 18,58,09,302 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.