முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அதீர் ரஞ்சன் சௌவுத்ரி உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் ராகுல் காந்தி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்ற வளாகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை