மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடியினர் கவுன்சில் தலைவர் சடலமாக மீட்பு

மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடியினர் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட அதுவான் அபோன்மாய் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடி அமைப்பின் தலைவர்  அதுவான் அபோன்மாய்

ஜீலியன்ராங் பவுடி அமைப்பானது மணிப்பூர், அசாம் மற்றும் நாகாலாந்தில் உள்ள பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் முன்னாள் தலைவராக செயல்பட்டவர் அதுவான் அபோன்மாய்.

இவர் செப்டம்பர் 22ஆம் தேதி மணிப்பூரின் தமேங்லாங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் அவரைத் தேடும் பணியில் மாநில காவல்துறையினர் இறங்கினர். எனினும் புதன்கிழமை தமேங்லாங் மாவட்டத்தின் பல்லோங் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com