பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அக்.4-இல் கூடுகிறது கேரள சட்டப்பேரவை

15ஆவது கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் அக்டோபர் 4ஆம் தேதி கூட உள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

News image

கேரள சட்டப்பேரவை

Updated On :30 செப்டம்பர் 2021, 4:36 pm IST

15ஆவது கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் 24 நாள்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க உள்ள இந்த கூட்டமானது நவம்பர் 12ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்பை கேரள சட்டப்பேரவைத் தலைவர் எம்.பி.ராஜன் அறிவித்தார்.

கரோனா காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீது விவாதம் ஏதும் நடைபெறாததால் அவை மீதான பேரவையின் ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை. இந்நிலையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேறாமல் உள்ள மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் அறிவித்த காகிதமில்லா சட்டப்பேரவை திட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.