தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமித் ஷா, வெங்கைய நாயுடுவுடன் திரெளபதி முர்மு சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார்.

News image
Updated On :23 ஜூன் 2022, 10:54 am

DIN

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக இன்று சொந்த ஊரிலிருந்து தில்லி வந்தடைந்த திரெளபதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.