சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

‘இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்’: சுப்பிரமணியன் சுவாமி

இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
சுப்பிரமணியன் சுவாமி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:12 am

DIN

இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். மக்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது மக்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது ராணுவத்தை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தற்போது, மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.