எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு உயர்வு: அவசர சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கர்நாடகத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கா்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயா்த்த அந்த மாநில அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம் கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பதால் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதம் உயர உள்ளது.
மேலும் இந்த இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் 9 வது அட்டவணையின் கீழ் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...