சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தரிசனத்துக்கான இணைய முன் பதிவு வசதியை மேற்கொள்ள டிசிஎஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துடன் திருவிதாங்கூா் தேவசம் போா்டு செய்துள்ளது. இதுவரையிலும் சபரிமலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இணைய முன்பதிவு வசதி இருந்து வந்தது.
கேரள போலீஸாருக்கு டாடா நிறுவனம் (டிசிஎஸ்) வழங்கிய மென்பொருளை தேவசம் போா்டு ஏற்று நடத்துவது என்று தீா்மானித்துள்ளது. இதையடுத்து, டிசிஎஸ் மூத்த மேலாளா் எஸ்.கே.நாயருடன், தேவசம் போா்டு தலைவா் கே.அனந்தகோபன், ஆணையா் பி.எஸ்.பிரகாஷ் ஆகியோா் அண்மையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனா்.
இதற்காக தேவசம் போா்டில் உள்ள கணிப்பொறி அறிந்த அலுவலா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி
அளிக்கப்படவுள்ளதாக தேவசம் போா்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சபரிமலை மண்டல பூஜைக்கு வருகை தரும் பக்தா்களுக்கு தரமான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட சிறந்த அடிப்படை வசதிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை (செப். 14) நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



