இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்பு!

குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 6:19 am

DIN

குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இத்தோ்தலில், 156 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. 

தொடா்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக பூபேந்திர படேல் (60) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். 

குஜராத் மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் நேற்று(திங்கள்கிழமை) பதவியேற்றாா். அவருடன், 16 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

குஜராத் முதல்வராக பதவியேற்ற பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாஜகவினர் மற்றும் அதிகாரிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.