சிவசேனை எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் இருப்பதாக சிவசேனை மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்எல்ஏக்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் இன்று ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது, 40 எம்எல்ஏக்கள் இங்கு இருக்கிறார்கள். நாங்கள் பாலசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவாவின்படி நடக்கிறோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் சூரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையில் இன்று அசாம் மாநிலம் கௌகாத்திக்கு சென்றுள்ளனர்.
அசாம் மாநில பாஜக எம்எல்ஏ சுஷாந்த், சிவசேனை எம்எல்ஏக்களை வரவேற்க விமான நிலையம் வந்துள்ளார். மேலும், எத்தனை எம்எல்ஏக்கள் வருகிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும் தனிப்பட்ட முறையில் அவர்களை அழைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் தங்கியுள்ளனர்.
முன்னதாக, நேற்று சூரத் விடுதியில் சிவசேனை எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ சஞ்சய் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசியில் பாஜக போட்டி: ஆா்வத்தில் வரையப்பட்ட அதிமுக சின்னம் குறித்து புகாா்

இளைஞா் கொலை: தம்பதி கைது

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

