கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தான் மக்களை வெள்ளத்திலிருந்து காக்கும் இந்து கோயில்

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் உள்ள இந்து கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு தங்குவதற்கு இடமளித்து அவர்களுக்குத் தேவையான  வசதிகளை செய்து வருகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 10:33 am

DIN

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் உள்ள இந்து கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு தங்குவதற்கு இடமளித்து அவர்களுக்குத் தேவையான  வசதிகளை செய்து வருகிறது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கால் தத்தளித்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் வீடுகளை இழந்து கடும் துயரத்தினை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் உள்ள பாபா மதோதாஸ் கோயில் வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்பான இடமாக இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பாபா மதோதாஸ் கோயில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதனால் வெள்ளத்தினால் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இதனையடுத்து, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த கோயிலில் தஞ்சம் அடைந்தனர். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த பாபா மதோதாஸ் கோயிலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும், அவர்களது கால்நடைகளுக்காவும் திறந்து விட்டனர்.

பாபா மதோதாஸ் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வாழ்ந்த இந்து துறவி எனக் கூறப்படுகிறது. அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களால் போற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பாபா மதோதாஸ் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்யும் வழக்கம் உடையவர் எனவும் கூறப்படுகிறது. மக்களை சாதி அடிப்படையில் பார்க்கப்படாமல் அவர்களின் நல்ல செயல்களை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.