புதுதில்லி: தில்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப். 12) பிரதமர் நரேந்திரே மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், ராஜஸ்தானின் தௌசாவில் சுமார் ரூ 18,100 கோடி மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுதில்லி மும்பை விரைவுச்சாலையின் புதுதில்லி - தௌசா - லால்சோட் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தவுடன் புதுதில்லியிலிருந்து 246-கிமீ தூரம் கொண்ட ஜெய்ப்பூருக்கான பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து சுமார் மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும். குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி - மும்பை விரைவுச்சாலை 1,386 கி.மீ நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இந்த விரைவுச்சாலை தில்லி மற்றும் மும்பையை இணைக்கும். இது இந்தியாவின் தேசிய தலைநகர் தில்லிக்கும், பொருளாதாரத்தின் தலைநகரான மும்பைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது. அதன் பயண நேரத்தை 8 வழிச்சாலை அணுகல், கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை, பயண நேரத்தை 24 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாகக் குறைக்க சீரமைப்பு மேம்படுத்தலுடன் கட்டப்படுகிறது. எதிர்காலத்தில் இது 12 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். 50 ஹவுரா பாலங்களுக்கு இணையான தில்லி மும்பை விரைவுச் சாலையின் கட்டுமானத்திற்காக 12 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த விரைவுச்சாலையின் முழு பணியும் நிறைவடைந்ததும், இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இது மாறும். இது பயண நேரத்தைப் பொறுத்து பல நகரங்களை இணைக்கும்.
மேலும், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்பாட்டு பாதைகளை அமைப்பதற்காக 3 மீட்டர் அகலமான பிரத்யேக நடைபாதையும் இருக்கும்.
அதிவேக நெடுஞ்சாலையானது 500 மீட்டர், இடைவெளியில் 2,000க்கு மேற்பட்ட நீர் ரீசார்ஜ் புள்ளிகள் அமைத்து மழை நீர் சேகரிப்பை எளிதாக்குகிறது. மேலும், தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் கொண்டுள்ளது.
தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 15,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 94 வழித்தட வசதிகள் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 10 கோடி மனித வேலைநாள் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்கும்.
தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அதிநவீன தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இருக்கும். இந்தியாவிலும் ஆசியாவிலும் விலங்குகள் மேம்பாலங்கள், அண்டர்பாஸ்கள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் முதல் அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும். ரணதம்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இது சீரமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரத்தத்த தா..! டிமான்டி காலனி - 3 முதல் பாடல்!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

நடிகர் ஜீவாவின் தகப்பன் முதல் தோற்ற போஸ்டர்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



