சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:29 pm IST

கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அமைச்சரவை அமைப்பது மற்றும் அமைச்சரவையில் யாரை சேர்ப்பது என்பது முதல்வரின் முடிவு. சித்தராமையா கட்சியில் பல்வேறு பெயர்களை விவாதித்துள்ளார், அதை அவர் முடிவெடுப்பதற்காக விட்டுவிட்டோம். மேலும் நீட்டிக்கப்பட்ட அமைச்சரவை நாளை கர்நாடகத்தில் பதவியேற்கப்படும் என்று சித்தராமையா என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மே 20ஆம் தேதி பதவியேற்றனா். மேலும் 8 போ் அமைச்சரவையில் இடம் பிடித்தனா். 34 போ் கொண்ட அமைச்சரவையில் 24 இடங்கள் காலியாக உள்ளன.

எனவே, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சியின் மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை தில்லி பயணம் சென்றனா். தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவைச் சந்தித்த முதல்வா் சித்தராமையா அமைச்சரவையில் மேலும் 24 பேரைச் சோ்ப்பது குறித்து விரிவாக விவாதித்தார்.

தொடர்ந்து, மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.