பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கும் மாயாவதி!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கவிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:43 am IST

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தொடங்கவிருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றம் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். 

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி கூறுகையில், 

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மாயாவதி பங்கேற்று உரையாற்றுவார். 

மேலும், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். 

தொழிலாளர்களையும், ஆதரவாளர்களையும் திரட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கான ஆயத்த பணிகளைத் தொடங்குமாறு கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் நவ. 6, 7, 8, 14 ஆகிய தேதிகளிலும், ராஜஸ்தானில் நவ. 17, 18, 19, 20 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்  நடத்தப்படும்.

நவம்பர் 9ஆம் தேதி சத்தீஸ்கரில் 2 தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், நவம்பர் 22,23-ம் தேதி தெலங்கானாவில் 2 தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் மாயாவதி உரையாற்றுகிறார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.

ராஜஸ்தான், தெலங்கானாவில் அக்கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.