மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

ஓய்வுபெற்றாலும் மன்மோகன் என்றுமே கதாநாயகன்தான்: காங்கிரஸ்

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

Updated On :

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார். அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள், தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றாலும்கூட, நாட்டுக்காகவும், நாட்டின் மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் நீடிப்பீர்கள், உங்களுக்கு அமைதியும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த நாடு குறிப்பாக, கிராம மக்கள், தங்களது வாழ்வுக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொண்டதற்காக உங்களை எப்போதும் நினைவுகூர்வார்கள்.

பிரதமர் அலுவலகத்துக்கு மன்மோகன் சிங் ஏற்படுத்திய அமைதியான, வலுவான கண்ணியத்தை தற்போது தேசம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி நிலவையும் சூரியனையும் மறைக்க முடியாதோ, அப்படித்தான் உண்மையையும் எப்போதும் மறைக்க முடியாது. நாட்டு மக்கள் விரைவில் உங்களின் வார்த்தைக்கான முக்கியத்துவத்தை அறிந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.