மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர் ரசாயன லாரி விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி!

ராஜஸ்தானில் ரசாயன லாரி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்தார்.

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Published On :

ராஜஸ்தானில் ரசாயன லாரி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்தார்.

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை (டிச. 20) அதிகாலையில் ரசாயன லாரி மோதி நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த நிலவரங்கள் குறித்தும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுடன் கேட்டறிந்தார்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே ரசாயன லாரி மோதியதில் 30 லாரிகள் உள்பட பல வாகனங்களில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர், 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்; அவர்கள் பாதிபேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகத் தெரிகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.