தஞ்சாவூர் மாவட்டத்தில் 80% பேருந்துகள் இயக்கம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 80% பேருந்துகள் இயக்கம்!


தஞ்சாவூர்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள நகரக் கிளை 1 - இல் கிட்டத்தட்ட 60 சதவீத பேருந்துகளும், கிளை 2 - இல் ஏறக்குறைய 55% பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதனால் தஞ்சாவூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து அரசு நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் வெகுநேரம் காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தஞ்சாவூர் புறநகர் கிளையில் 80% பேருந்துகள் இயக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த நெரிசலுக்கிடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 80% பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி ஏறத்தாழ 80% பேருந்துகள் இயக்கப்பட்டன.  பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தேவைப்படும் பட்சத்தில் வட்டார போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பட்டியலில் இடம்பெற்ற பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பேருந்துகள் இயக்க அழைக்கப்படுவர் என கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள பணிமனை முன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com