சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது: பிரியங்கா சதுர்வேதி

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.
பிரியங்கா சதுர்வேதி (கோப்புப்படம்)
பிரியங்கா சதுர்வேதி (கோப்புப்படம்)

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை என்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “என்றென்றும் அவர்களே ஆட்சியில் இருக்கப் போவதில்லை. சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துரதிர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. 

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிர மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.” என்று தெரிவித்தார். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலகி தனி அணி அமைத்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது புதன்கிழமை தீர்ப்பளித்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் தீர்ப்பை ஜனநாயகப் படுகொலை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com