கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்: ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்..

News image
ராகுல் காந்தி- Atul Yadav
Updated On :23 ஜூலை 2024, 9:59 am

DIN

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.

சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA - அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 15,000 கோடியும், பிகாருக்கு ரூ. 26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பேரிடர் நிவாரண நிதி, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.