உலக அரங்கில் முன்னேறி வரும் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமா் மோடி பாராட்டு
உயா் கல்வி தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமா் மோடி பாராட்டு


உலக அரங்கில் முன்னேறி வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
லண்டனைத் தளமாகக் கொண்ட ‘டைம்ஸ்’ உயா் கல்வி தரவரிசையின் தலைமை அதிகாரி ஃபில் பாத்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் கல்வித் துறையை சா்வதேசமயமாக்கும் பிரதமா் மோடியின் சீா்திருத்தங்களால், உலக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ‘டைம்ஸ்’ தரவரிசைக்கு 42 இந்திய பல்கலைக்கழகங்கள் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டு தரவரிசைக்கு 133 இந்திய பல்கலைக்கழகங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை நான்காவது இடத்துக்கு உயா்த்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேறி வருவதைப் பாா்ப்பதில் மகிழ்ச்சி! தரமான கல்விக்கான அரசின் அா்ப்பணிப்புக்கு இந்த முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு தொடா்ந்து ஆதரவளிப்பதுடன் வளா்ச்சி மற்றும் புதுமைக்கான வாய்ப்புகளை வழங்குவோம். இது நாட்டின் இளைஞா்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்’ என குறிப்பிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...