சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

முதல் முறையாக வாக்களித்த மிராயா வத்ரா!

இளைஞர்களுக்கு எனது ஒரே செய்தி, மாற்றத்தை உருவாக்குவது அவசியம்..

News image
Updated On :25 மே 2024, 1:27 pm IST

மூத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் மகள் மீராயா வத்ரா முதல் முறையாக சகோதரர் ரைஹானுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

புது தில்லி, லோதி சாலையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பெற்றோர்களுடன் இருவரும் வந்து வாக்களித்தனர். இளைஞர்களுக்கு எனது ஒரே செய்தி, மாற்றத்தை உருவாக்குவது அவசியம், எனவே அனைவரும் வெளியே வந்து வாக்களியுங்கள் என்பதுதான்.

Story image

இதற்கு முந்தைய தேர்தலிலும் வாக்களித்த ரைஹான் வத்ரா, தில்லி கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தில் பங்கேற்கவும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்த வாய்ப்பைப் பெறுகிறோம் எனவே அனைவரும் வாக்களிக்க வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாற்றத்திற்கு மக்கள் முன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

அவரது கணவர் ராபர்ட் வத்ராவும் வாக்களித்து, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை மக்கள் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

82 லட்சம் ஆண்கள், 69 லட்சம் பெண்கள் மற்றும் 1,228 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.52 கோடி வாக்காளர்கள் தில்லியின் ஏழு தொகுதிகளில் உள்ள 13,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தமுறை 2.52 லட்சத்துக்கும் அதிகமான முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.