சுற்றுலா போகணுமா? இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு

உள்நாடு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகணுமா? இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..
Published on
Updated on
1 min read

சென்னை: இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டலத்தின் ஐஆர்சிடிசி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ், உடுப்பி - முருதேஸ்வருக்கு 4 நாள்கள் சுற்றுலா செல்லலாம். இதில், ஸ்ரீங்கேரி, ஹொரநாடு, தர்மஸ்தலம், குக்கே சுப்ரமணிய கோயில் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படும். இதற்கு ஒரு நபருக்கு ரூ.30,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்து குஜராத் மாநிலத்துக்கு சுற்றுலா. வதோரா, புவ்நகர், சோம்நாத், துவாரகை, ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 9 நாள்கள் சுற்றுலா. இதற்கு ஒரு நபருக்கு ரூ.43,000 கட்டணம்.

மகாராஷ்டிர மாநிலத்தில், ஐந்து நாள்கள் பஞ்ச ஜோதிர்லிங்க தலங்களுக்கு செல்லும் பயண திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.33,900 கட்டணம். இதில் திரையம்பகேஸ்வரர், அனுத நாக்நாத், ஷீரடி உள்ளிட்ட ஐந்து தலங்கள் காண்பிக்கப்படும்.

தங்க முக்கோண ஒடிசா பயண திட்டம் ஐந்து நாள்கள் கொண்டதாகவும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ.38,000 கட்டணம். புவனேஸ்வரம், கோனார்க், புரி உள்ளிட்ட இடங்கள் காண்பிக்கப்படும்.

ஏழு நாள்கள் செல்லும் ராயல் ராஜஸ்தான் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிகாநீர், ஜெய்ப்பூர், புஷ்கர், உதைபூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ரூ.42,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இது மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, துபை, அபுதாபி, இலங்கை, பாலி, தாய்லாந்து நாடுகளுக்கும் ஐஆர்சிடிசி சுற்றுலா அறிவித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியாவுக்கு 6 நாள் சுற்றுலாவும் அதற்கு கட்டணமாக ரூ.1,12,500ம், 5 நாள் சுற்றுலாவாக துபை, அபுதாபி செல்ல ரூ.93,500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆறுநாள் சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இலங்கைக்கு ரூ.64,500ம், பாலிக்கு ரூ.84,900மும், தாய்லாந்து செல்ல ரூ.67,500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com