கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

உண்மை எப்போதும் தோற்பதில்லை: ஆம் ஆத்மி!

எந்த ஆதாரமும் இல்லாமல் 23 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதிஷி - Center-Center-Delhi

Updated On :

"உண்மைக்குச் சோதனை வரும் ஆனால் தோற்கடிக்க முடியாது" என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தில்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் கூறுகையில், ஜாமீன் என்பது சட்டம் மற்றும் சிறை விதிவிலக்கு என்ற சட்டக்கோட்பாட்டை நம்பி விசாரணைக்கு முன்னர் சிறைவாசம் என்பது தண்டனையாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதுதொடர்பாக தில்லி அமைச்சர் அதிஷி வெளியிட்ட பதிவில்,

"சத்யமேவ் ஜெயதே"! ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக மத்திய அரசு சதி செய்து பல கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தது.

மணீஷ் சிசோடியா மற்றும் விஜய் நாயர் ஜாமீன் பெற்ற நிலையில், உண்மைக்குச் சோதனை வரும் ஆனால் தோற்கடிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, நாயர் எந்த ஆதாரமும் இல்லாமல் 23 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் புனையப்பட்ட மதுபான ஊழல் வழக்கின் மற்றொரு பலூன் இன்று வெடித்தது. கால நேரம் ஆனாலும், இறுதியில் உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்று இந்தியில் சிசோடியா கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.