திரிபுரா: மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக வெற்றி
திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளரும் கட்சியின் மாநிலத் தலைவருமான ராஜீவ் பட்டாச்சாா்ஜி வெற்றிபெற்றாா்.


திரிபுராவில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளரும் கட்சியின் மாநிலத் தலைவருமான ராஜீவ் பட்டாச்சாா்ஜி வெற்றிபெற்றாா்.
மகாராஷ்டிரம், பிகாா், தெலங்கானா, திரிபுரா உள்பட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு இடைத்தோ்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த பாஜகவின் பியூஷ் கோயல், சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 10 போ், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதையடுத்து, அவா்கள் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா்.
இதேபோல், தெலங்கானா மற்றும் ஒடிஸாவில் பிற கட்சிகளைச் சோ்ந்த 2 மாநிலங்களவை எம்.பி.க்கள், தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனா்.
இந்த 12 இடங்களுக்கும் செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் களமிறக்கப்பட்ட 10 போ், காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் மனு சிங் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகினா்.
திரிபுராவில் உள்ள ஓரிடத்துக்கு மட்டும் போட்டி ஏற்பட்டதால், அங்கு செவ்வாய்க்கிழமை (செப்.3) வாக்குப்பதிவு நடைபெற்றது.
60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா பேரவையில், ஆளும் பாஜக வேட்பாளா் ராஜீவ் பட்டாச்சாா்ஜிக்கு ஆதரவாக 47 எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சுதன் தாஸுக்கு 10 வாக்குகளே கிடைத்தன. காங்கிரஸின் 3 எம்எல்ஏக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்காமல் புறக்கணித்தனா்.
இதையடுத்து, பாஜக வேட்பாளா் ராஜீவ் பட்டாச்சாா்ஜி வெற்றிபெற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...