/

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வாதிட 6 கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் நியமனம்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக அரசு நியமித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :10 செப்டம்பர் 2024, 8:01 pm

Din

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக அரசு நியமித்துள்ளது.

இவா்கள் மூன்று ஆண்டுகாலம் பதவிவகிக்கவுள்ளனா். இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எஸ்.துவாரகநாத், அா்ச்சனா பதக் தாவே, சத்ய தா்ஷி சஞ்சய், பிரிஜேந்தா் சாஹா், ராகவேந்திர பி.சங்கா் மற்றும் ராஜ்குமாா் பாஸ்கா் தாக்கரே ஆகிய 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்களாக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஆணை வெளியிட்டது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் மத்திய அரசு சாா்பில் வாதிடும் அட்டா்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டா் ஜெனரலுக்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் உதவிகரமாக இருப்பா்.

ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் 5 கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் இருந்துவரும் நிலையில் காலியாக இருந்த 6 பணியிடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன.