

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜைக்காக, ஐயப்பன் சிலைக்கு அணிவிக்கப்படவுள்ள தங்க அங்கியை ஏற்திச் செல்லும் சடங்கு ஊர்வலம் ஆரன்முளா பாரத்தசாரதி கோயிலில் இருந்து இன்று தொடங்கியது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்புப் பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஆரம்பம் முதலே பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு முறையில் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்குப் புறப்பட்டது. மலைக்கோவிலை நோக்கிய தங்கி அங்கி கொண்டுசெல்லும் பயணம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 453 சவரன் எடை கொண்ட இந்த தங்க அங்கி 1970-களில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் ஐயப்பனுக்குப் பரிசளிக்கப்பட்டதாகும்.
டிச.26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும். இதனை தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும். மறுநாள் மண்டல பூஜை, வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மண்டல பூஜை நிறைவடைகிறது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30ம் தேதி காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 14 வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.