கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத தில்லி முதல்வர்! காரணம்?

தில்லி முதல்வர் கண்ணீர் விட்டு அழுதது பற்றி..

News image
முதல்வர் அதிஷி
Updated On :6 ஜனவரி 2025, 11:16 am

DIN

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாநில முதல்வர் கண்ணீர் மல்க பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி, அதனுடனான அரசியல் கூட்டணியை அண்மையில் முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன.

இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால், முதல்வர் அதிஷிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை ஜன. 4-ல் பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, புதுதில்லி தொகுதியில் கேஜரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மாவும், முதல்வர் அதிஷி களமிறங்கிய கல்காஜியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பியான ரமேஷ் பிதுரியை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முதல்வர் அதிஷியின் குடும்பத்தைத் தாக்கி ரமேஷ் பிதூரி பேசியுள்ளார். இதற்கு அதிஷி கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

பிதூரியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அதிஷி கூறுகையில்,

அரசியல் இந்தளவுக்கு தரம் தாழ்ந்துபோகும் என நினைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து கல்காஜி தொகுதிக்கு அவர் செய்த பணிகளை காட்ட வேண்டும். அதனடைப்படையில் வாக்குகளைச் சேகரிக்க வேண்டுமே தவிர, எனது தந்தையை தவறாகப் பேசி அல்ல.. என்று அவர் தெரிவித்தார்.

அதிஷி தனது துணைப் பெயரை மாற்றியதைத் தொடர்புபடுத்தி ரமேஷ் பிதூரி ரோகினியில் நடைபெற்ற பாஜகவின் பரிவர்தன் பேரணியில் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.