தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றார் அமித் ஷா.
அமித் ஷா
அமித் ஷாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''அனைவரும் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம். உலகளாவிய டிஜிட்டல் மையமாக இந்தியாவை இத்திட்டம் முன்னேற்றியுள்ளது. சுகாதாரத் துறையில் இருந்து கல்வித் துறை மற்றும் வணிகம் என அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி புதுமையை ஏற்படுத்தியுள்ளது. நிலையான டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி மக்களை மேம்படுத்தும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று, டிஜிட்டல் இந்தியா திட்டமானது நாடு முழுவதும் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

Summary

Amit Shah said that the Digital India project has democratized technology so that it can be used by everyone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com