அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்..

News image

யுஜிசி (கோப்புப் படம்)

Updated On :7 ஜூன் 2025, 11:19 pm IST

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு மாணவா் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாக பயில முடியும். அந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காத வகையிலும், அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணையவழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.

இந்த வழிகாட்டுதல்கள் பி.ஹெச்டி. தவிா்த்து பிற படிப்புகளுக்கு பொருந்தும். இவற்றை கருத்தில்கொண்டு உயா் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவா்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.