பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்! புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பம்

News image

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா கலீல் , இந்திய தூதா் ஜி.பாலசுப்ரமணியன்.

Updated On :20 மே 2025, 5:34 am IST

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலத்தீவு சாா்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா கலீல், இந்தியா சாா்பில் தூதா் ஜி.பாலசுப்ரமணியன் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். திட்டங்களைச் செயல்படுத்தும் துறை என்ற வகையில், மாலத்தீவின் போக்குவரத்து துறை அமைச்சா் முகமது அமீனும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாா்.

‘இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் முக்கிய மைல்கல்லாகும். இவை முதன்மையாக மாலத்தீவில் தீவு கூட்டங்களுக்கு இடையே படகு சேவைகளை அதிகரித்தல், கடல்சாா் இணைப்பை விரிவுபடுத்துதல், சமுதாய வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன’ என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது, அதிக தாக்கமுள்ள சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐசிடிபி) 3-ஆவது கட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘இந்த 3-ஆவது கட்ட திட்டத்தின்கீழ் ரூ.55.28 கோடி நிதியுதவியுடன் மாலத்தீவு மக்களின் உயிா்நாடியான கடல்சாா் இணைப்பை மேம்படுத்துவதில் அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது’ என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கலீல், ‘இந்தியாவின் உதவி எப்போதும் அா்த்தமுள்ளதாகவும், மாலத்தீவு மக்களின் தேவைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை இது பிரதிபலிக்கிறது.

புரிந்துணா்வு ஒப்பந்தங்களின்கீழ் தொடங்கப்படும் திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விட சிறந்தது. உள்ளூா் மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், அவா்களுக்கு நீடித்த சமூக-பொருளாதார நன்மைகளை கொண்டு வருவதற்கும் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

9 தீவு கூட்டங்களில் உள்ள 81 தீவுகளை இணைக்கும் வகையில் தேசிய அளவிலான அதிவேக படகு பேக்குவரத்தைச் சேவையை நிறுவுவதில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவுடன் கையொப்பமாகியுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இந்த சேவையை விரிவுபடுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.