ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்டது பற்றி..

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கார்.

Published On :

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் பூட்டப்பட்ட காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வசிப்பவர் பிரவீன் மிட்டல். இவர், தனது மனைவி, பெற்றோர், இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் தாமில் உள்ள ஆன்மிக நிகழ்வுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, குடும்பத்துடன் காரை பூட்டிக்கொண்டு விஷம் குடித்துள்ளனர். காருக்குள் உயிருக்கு போராடுவதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹரியாணா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், காருக்குள் கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் கடன் பிரச்னை காரணமாக அழுத்தத்தில் இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தடயவியல் நிபுணர்கள் காரை சோதனை செய்தனர்.

7 பேரின் உடலும் உடற்கூராய்வுக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.