

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கமன் பாலம் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை விசாகப்பட்டினம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது,
விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற பேருந்து திடீரென தீப்பற்றியது. ஓட்டுநரின் திறமையால் பேருந்து முழுவதுமாக தீப்பற்றாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பேருந்திலிருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த தீ விபத்து அதிகாலை 2 மணியளவில் பேருந்து சுங்கச்சாவடியை நெருங்கியபோது ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை, உயிரிழப்பு நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் டைனமோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்தார். சுங்கச்சாவடி அருகே பேருந்து நின்றதும், ஓட்டுநர் எஞ்சினைப் பரிசோதித்தபோது தீப்பொறிகள் ஏற்பட்டதையடுத்து அவர் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை எச்சரித்தார், அவர்கள் விரைவாகக் கீழே இறங்கினர்.
ஓட்டுநரின் விரைவான செயலால் பெரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் 10 நிமிடங்களுக்குள் வெளியேற்றினர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் போக்குவரத்தைச் சீரமைத்து, தீ விபத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியத் தொழில்நுட்ப ஆய்வைத் தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.