பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஹிமாச்சலில் நாளை கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rains in Kerala

கோப்புப் படம் - கோப்புப் படம்

Published On :

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

காங்ரா, மண்டி, குல்லு, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களின் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வரை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். அதே வேளையில், ஜூன் 9 ஆம் தேதி வரை மாநிலத்தில் மழைப்பொழிவு நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் கடந்த 24 மணி நேரத்தில், இப்பகுதியின் பல இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவானது. சிம்லா, முராரி தேவி மற்றும் காங்ரா ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழையும், தாபோ மற்றும் சுந்தர்நகர் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியது.

குகும்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.6 டிகிரி செல்சியஸாகப் பதிவான நிலையில், மாநிலத்திலேயே மிகவும் குளிரான இடமாக திகழ்ந்தது. அதே சமயம், நேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summary

The meteorological centre here on Wednesday issued an orange alert.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.