போராட்டக்காரர்களைக் கையாள முழு சுதந்திரம் தேவை: காவல்துறை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

போராட்டக்காரர்களைக் கையாள சுதந்திரம் வழங்கக்கோரி தில்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது குறித்து...

Supreme Court has rejected a plea seeking directions to give the Delhi Police a free hand to deal with protesters

தில்லி காவல்துறை மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

போராட்டக்காரர்களைக் கையாள சுதந்திரம் வழங்கக்கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தில்லியில் ஜூலை மாதத்தில் ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக மாணவர்கள், இளைஞர்கள் மீது தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்பட இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, போராட்டக்காரர்களைக் கையாள முழு சுதந்திரம் வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, "நம் முன்னால் இருக்கும் போராட்டக்காரர்கள் இளைஞர்களும் மாணவர்களும்தான்.

அவர்களின் பெற்றோரையும் நாம் பார்க்க வேண்டும். இவர்கள் வாழ்வதற்கு இன்னும் நிறைய உள்ளது. அப்படியிருக்கையில், நீதிமன்ற விசாரணை போன்றவற்றில் இவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு அளிக்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

Summary

Supreme Court has rejected a plea seeking directions to give the Delhi Police a free hand to deal with protesters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.