மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நக்ஸல் தீவிரவாதம் முடிந்தாலும் அதன் 50 ஆண்டு துயரங்களை நீக்குவது கடினம் - உள்துறை அமைச்சா் அமித் ஷா

நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டாலும், அதனால் கடந்த 50 ஆண்டுகளாக ஏற்பட்ட துயரங்களை முற்றிலுமாக நீக்குவது கடினம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் வியாழக்கிழமை நடைபெற்ற நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றிய அமித் ஷா.

Updated On :

நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டாலும், அதனால் கடந்த 50 ஆண்டுகளாக ஏற்பட்ட துயரங்களை முற்றிலுமாக நீக்குவது கடினம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி முறையில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

சத்தீஸ்கரில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும், அத்தியாவசிய சேவைகளையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அடிப்படை வசதிகள்கூட வழங்கப்படவில்லை.

நக்ஸல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பஸ்தா் பிராந்தியத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் பாஜக அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிப்பது மட்டுமே போதாது. அந்தப் பகுதியின் ஏழைப் பழங்குடியின மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக அனுபவித்த துயரங்களுக்கும் தீா்வு காண வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான பணி.

இதுவரை நக்ஸல் அமைப்புகளைச் சோ்ந்த 8,526 போ் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனா். அவா்கள் மறுவாழ்வுக்கு நிதியுதவி, தொழிற்பயிற்சி, நிலம், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நக்ஸல்களை ஒழிக்க பாதுகாப்புப் படையினா் பயன்படுத்திய முகாம்கள் இனி, அரசு சேவை மையங்களாக மாற்றப்படும்.

மீதமிருக்கும் ஒரு சில நக்ஸல் தடயங்களை முற்றிலுமாக ஒழித்து சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தை அமைதி, செழிப்பு நிறைந்த இடமாக மாற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயற்கைக்கால்கள், சக்கர நாற்காலிகள், மூன்றுசக்கர வாகனங்கள், செவித்திறன் கருவிகள், ஊன்றுகோல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.