
பிகாரில் வெள்ளத்தால் 27 லட்சம் மக்கள் பாதிப்பு! முதல்வர் ஆய்வு
கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பிகாரின் 13 மாவட்டங்களில் 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு பரிமாறும் பிகார் முதல்வர் சாம்ராட் சௌதரி. - படம் - பிடிஐ
கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பிகாரின் 13 மாவட்டங்களில் உள்ள 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெய்துவரும் மழை மற்றும் பிகாரில் தொடரும் பலத்த மழை காரணமாக இம்மாநிலத்தில் கங்கை உள்பட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் இதுவரை 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைத்தல், மீட்புப் பணிகள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் அரசின் மூலம் பொது சமையலறைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணிகளை முதல்வர் சாம்ராட் சௌதரி, துணை முதல்வர் விஜய் குமார் சௌதரி ஆகியோர் திங்கள்கிழமை (செப். 7) நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த மக்களுக்கு முதல்வர் உணவு பரிமாறினார்.
இதுமாதிரியான அரசின் பொது சமையலறைகள் மாநிலத்தில் 190 இடங்களில் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகளில் 1,429 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கனமழை அதிகமாக பெய்துவரும் இடங்களில் அதிகாரிகள் தயாரக இருக்கவும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Flooding in rivers including the Ganges in Bihar has affected 2.7 million people across 13 districts of the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






