ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மேற்கு வங்கத்தில் கால் பதித்த தவெக!

கேரளத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது குறித்து...

TVK unit launched in West Bengal

மேற்கு வங்கத்தில் தவெக - இன்ஸ்டாகிராம்

Published On :

கேரளத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார். கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளில் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தில் தவெக தொடங்கப்பட்டது. இதற்காக இளைஞர்கள் பலர் இணைந்து கூட்டங்களையும் நடத்தி, தொண்டர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தவெக கிளை தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் கட்சியின் கிளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் மாநில நிர்வாகிகளாக மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய். டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தவெக கிளை தொடங்கப்பட்ட மேடையில் கட்சியின் தலைவர் விஜய்யின் படமும், பொதுச்செயலாளர் என். ஆனந்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் பலரும் தவெகவின் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான துண்டு அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

TVK unit launched in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER